Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி படத்தின் பெயர் ?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

ரஞ்சித் அந்தப்படம் பற்றிப் பேசியவற்றை வைத்து படத்துக்குக் காளி என்று பெயர் வைக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் காளி என்று பெயர்வைத்தால் அந்தப்படத்துக்கு நிறையச்சிக்கல்  வரும் அல்லது அசம்பாவிதங்கள் நடக்கும் என்று நம்பிக்கை நிலவுவதால், அந்தப்பெயர் வேண்டாம் என்று நினைக்கிறார்களாம்.

அதனால் இப்போது கண்ணபிரான் என்றொரு பெயர் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்பெயர் இயக்குநர் அமீரிடம் இருப்பதாகவும் அவரிடம் இந்தப் பெயரை வாங்குவது தொடர்பாகப் பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னும் ஒரிரு நாட்களில் இது உண்மையா இல்லையா என்பது தெரிந்துவிடுமென்றும் சொல்லப்படுகிறது.
 
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close