Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்யா படத்தை உதயநிதி வெளியிடாதது ஏன்?

ஆர்யா தயாரிப்பில் உருவான வாசுவும்சரவணனும்ஒண்ணாபடிச்சவங்க படத்துக்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அதனால் அந்தப்படத்துக்கு வரிவிலக்குக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். அதனாலேயே படவிநியோகத்தில் ஒரு மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தை உதயநிதி வாங்கி வெளியிடுவதாக இருந்ததாம். அவருடைய நிறுவனத்தில் பணியாற்றுகிறவர்கள்தாம் இந்தப்படத்துக்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யமுற்பட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. உதயநிதி படத்தை வெளியிட்டால் படத்துக்கு வரிவிலக்குக் கிடைக்காது என்கிற நிலை.

இதனால் படத்தை அவரிடம் தாராமல் ஆர்யாவே வெளியிடுவதாகச் சொல்லப்படுகிறது. உதயநிதியின் பெயரைப் போடாமல் வெளியிடலாம் என்றாலும் வரிவிலக்குக் குழுவில் இருக்கும் ஆளும்கட்சி ஆதரவாளர்கள் அந்தவிசயத்தை சம்பந்தப்பட்ட அமைச்சருக்குச் சொல்லிவிடுகிறார்களாம். அதனால் உதயநிதியிடம் கொடுக்காமல் ஆர்யாவே படத்தை வெளியிடுவதாகச் சொல்கிறார்கள்.          

MUST READ

எடிட்டர் சாய்ஸ்