Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவுக்கு வாழ்த்துகள் சொன்ன ஹன்சிகா!

சிம்பு, ஹன்சிகா, நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள படம் ‘வாலு’. படத்திற்கு இசை தமன். நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு படம் நாளை வெளியாக உள்ள நிலையில் டிக்கெட்டுகள் அனைத்தும் மிக விரைந்து புக்காகி வருகின்றன. 

படத்தில் சிம்புவின் பெயர் ஷார்ப். ஹன்சிகாவின் பெயர் ப்ரியா மகாலட்சுமி. இந்த படத்தின் படப்பின் போதுதான் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் காதலிப்பதாக பல விழாக்களில் சொன்னார்கள். 

ஆனால் என்ன இருவரும் படம் வருவதற்குள் பிரிந்தனர். ஹன்சிகா அவருடைய பாதை, சிம்பு இவர் பாதை என தனியாகினர். மேலும் தான் விரும்பிய பெண்ணும் தன்னை விட்டுச் சென்று விட்டதாக மிகவும் வருத்தப்படவும் செய்தார் சிம்பு. இந்நிலையில் இருவரும் பேசிக்கொள்ளாமல் கூட இருந்தனர். கடந்த 9ம் தேதி ஹன்சிகாவின் பிறந்தநாளையொட்டி சிம்பு சரியாக 12 மணிக்கு வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்தார். 

இப்போது ஹன்சிகா நாளை ‘வாலு’ படம் வெளியாவதையடுத்து சிம்புவுக்கு வாழ்த்துகளை பரிமாறி உள்ளார்.' ஆல் தி பெஸ்ட் சிம்பு, இந்த படத்திற்காக பல கடினமாக தருணக்கள், தியாகங்கள் செய்தீர்கள். எல்லாவற்றிற்கும் தக்க சன்மானம் கிடைக்கும் நேரம் வந்து விட்டது. ஜொலிக்கும் நேரம் இது என சிம்புவுக்கு’ வாழ்த்துகளை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close