Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிஷ்கினின் சகோதரரும் இயக்குநரானார்

 இயக்குநர் ராம் கதாநாயகனாகவும், பூர்ணா நாயகியாகவும் நடிக்கும் படம் சவரக்கத்தி. இந்தப்படத்தை மிஷ்கின் தன்னுடைய லோன்உல்ப் புரொடகஷ்ன்ஸ் மூலம் தயாரிக்கிறார். அதோடு படத்தின் கதையையும் எழுதி வில்லனாகவும் நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தை மிஷ்கினிடம் உதவிஇயக்குநராகப் பணியாற்றிய ஆதித்யன் இயக்குகிறார் என்று சொல்லப்பட்டது. இந்த ஆதித்யன், மிஷ்கினிடம் உதவிஇயக்குநராகப் பணியாற்றியவர் என்பது உண்மைதான். அதைவிடப் பெரிய உண்மை ஒன்று இருக்கிறது.

அவர் மிஷ்கினின் உடன்பிறந்த சகோதரராம். அவருடைய இயற்பெயர் சாமி என்றும் இயக்குநரான பின் பெயரை மாற்றிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதை வெளிப்படையாக அறிவித்திருந்தால் இன்னும் பலமாக அமைந்திருக்கும், அதைச் சொல்லாமல் விட்டது ஏனோ தெரியவில்லை.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close