Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊர் ரெண்டுபட்டாலும் சந்தானத்துக்குக் கொண்டாட்டம்

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் வாசுவும்சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க படத்தை ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிடுவது என்று சுமார் ஒரு மாதத்துக்கு முன்பே முடிவுசெய்துவிட்டார்கள். அதை நோக்கி அவர்கள் சரியாக முன்னேறியும்விட்டார்கள்.

இது ஆர்யாவின் சொந்தத்தயாரிப்பு என்பதால், தமிழகம் முழுவதும் பயணம் செய்து ரசிகர்களைச் சந்தித்துப் படத்துக்கு விளம்பரம் செய்தார் ஆர்யா. ஆனால் கடைசிநேரத்தில் பலமுறை தள்ளிப்போன சிம்புவின் வாலுவும் இதேதேதிக்கு வந்துவிட்டது. இதனால் ஆர்யாவின் குழுவினருக்கு மனசுக்குள் பெரியவருத்தம் இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவர்கள் படத்தை விளம்பரப்படுத்துவதில் வேகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

திரையரங்குகள் கிடைப்பதிலும் வாலு போட்டிக்கு வந்துவிட்டது. அதையும் சமாளித்துக்கொண்டிருக்கின்றனர். வாலுவைஙப பொறுத்தவரை மூன்றாண்டுகளுக்குப் பிறகு வருகிற சிம்பு படம் என்பதோடு சர்ச்சைகளாலேயே பெரிய விளம்பரத்தைப் பெற்றிருப்பதால் அந்தப்படத்தைப் பார்க்க மக்கள் முன்வருவர். இவ்வளவு எதிர்பார்ப்புள்ள படம் தனியாக வந்திருந்தால் அவர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்திருக்கும்.

வலிமையாக விளம்பரம் செய்யும் இன்னொரு படத்தோடு போட்டிபோட வேண்டியிருக்கிறதே என்று வாலு குழுவினருக்கும் மனசுக்குள் வருத்தம் இருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி சந்தோசமாக இருப்பவர் சந்தானம் மட்டும்தான் என்கிறார்கள்.

இரண்டுபடங்களிலும் அவர் இருக்கிறார். அதனால் எந்தப்படம் முந்தினாலும் அந்தப்படத்தில் அவர் இருப்பார் என்பதால் அவர்தான் அதிகசந்தோசத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close