Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுவிலக்கைக் கொண்டு வந்தால் ராஜேஷ் கதி என்ன? படம் பார்த்த ரசிகர்கள் கேள்வி

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, பானு நடிப்பில் இன்று வெளியாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விஎஸ்ஓபி. அதாங்க வாசுவும் சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க.

படத்தின் ஓபனிங் சீனிலேயே ஆர்யாவும், சந்தானமும் குடிபோதையில் இருப்பது போலவே படம் தொடங்கி படம் முடியும் வரையிலும் முழுக்க முழுக்க மதுகுடிப்பதை மையப்படுத்தியே படமெடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். அதிலும் குறிப்பாக தமன்னா ஒரு காட்சியில் ஆர்யாவுடன் இணைந்து மது அருந்துவது போலவும் காட்சிகள் இருக்கின்றன. மது அருந்தியதோடு நில்லாமல் நடு இரவில் ஒரு வீட்டின் கதவைத் தட்டி ரகளை செய்வதெல்லாம் ராஜேஷ் என்ன தான் நினைக்கிறார் தமிழ் இளசுகள் குறித்து என்றே தோன்றுகிறது.

இப்படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க மது அருந்துவதும், மது சார்ந்த டயலாக்குகள் இருப்பதும் சலிப்பை ஏற்படுத்துவதாகவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் நெட்டிசன்களிடையே விஎஸ்ஓபி படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

சமீபத்தில் மதுவிற்கு எதிராகப் பல போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பிவரும் இந்த நேரத்தில் இப்படம் வெளியாகியிருப்பது பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை மட்டுமே உண்டாக்கியிருக்கிறது. சுதந்திர தின விடுமுறையை மையமாகக் கொண்டு வெளியாக வேண்டிய படமா இது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மது அருந்தும் காட்சிகள் மட்டுமில்லாமல், “ சாம்பாருக்கு ஊறுகா சாப்டுற உனக்கே இவ்வளவுன்னா சரக்குக்கு ஊறுகா சாப்புடுற எனக்கு எவ்வளவு இருக்கும்?” இது போன்ற டயலாக்குகளுமே மது சார்ந்த விஷயமாகவே படம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

இணையத்தில் சந்தானம் தன் பெயரை சாராயம் என்றே மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்ற மீம்ஸ்களும், மதுவைத் தடைசெய்வதற்கு முன் ராஜேஷை தடை செய்யுங்கள் என்று பல கமெண்டுகளும் இப்படம் சார்ந்த எதிப்புகளுமே இணைய ரசிகர்களிடையே வலுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

போலீஸாக வரும் விஷாலே குடிக்க இடம் இல்லாமல் அல்லாடுவதாக கூறுவது என படம் ஆரம்பம் முதல் கடைசி வரை மது வாடை அதிகமாகவே இருக்கிறது. மேலும் பெண்கள் என்றால் நண்பர்களைப் பிரித்து விடுவார்கள் என சொல்லி அவர்களை எப்படி ஏமாற்றி நண்பர்களுடன் தண்ணி அடிக்கலாம் என்பதுதான் இந்தப்படம் சொல்லும்  மெஸேஜ். 

ஒருவேளை தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தினால் ராஜேஷின் நிலைதான் என்ன என்பதே ரசிகர்களின் உச்சபட்ச கேள்வியாக வந்துநிற்கிறது. இதற்கு ராஜேஷ் தான் பதில் சொல்லவேண்டும்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close