Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினி பட விவகாரம், அச்சத்தில் படக்குழு, கடுப்பில் ரசிகர்கள்!

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.

இந்தப்படம் பற்றிய எந்தத்தகவலையும் பகிர்ந்ருகொள்ளாமல் மிகவும் ரகசியமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுடைய நகர்வுகள் அப்படம் பற்றிய பல செய்திகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

அந்தப்படத்தின் பெயர் பற்றிப் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தொடக்கத்தில் காளி, அதன்பின் கண்ணபிரான் என்று சொல்லப்பட்டது.இப்போது கபாலி என்கிற பெயர் அடிபட்டுக்கொண்டிருக்கிறது.

ரஞ்சித்தின் முந்தைய படமான மெட்ராஸ் படத்துக்கும் இவ்விரு பெயர்களும் சொல்லப்பட்டது நினைவிருக்கலாம். அதேபோல இப்போதும் காளி, கபாலி ஆகிய இவ்விரு பெயர்களும் சொல்லப்படுகின்றன. இவை எதுவும் இல்லாமல் புதியபெயர் சூட்டப்படும் என்றும் சொல்கிறார்கள்.

படம் ஆரம்பிக்கிறதுக்குள்ள இன்னும் எவ்வளவு பெயர்கள் வருமோ என்கிற அச்சத்தில் படக்குழுவினர் இருக்கிறார்களாம். அதேசமயம் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்