Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல் பட இயக்குநரின் கதையில் அருள்நிதி நடிப்பது எதனால்?

அருள்நிதி நடித்து கடந்த ஜூலையில் நாலுபோலிஸூம்நல்லாஇருந்தஊரும் படம் வெளியானது. அதற்கடுத்து அவர் ஒரு மலையாள மொழிமாற்றுப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்துஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாளப்படம் மெமரிஸ். இந்தப்படத்தின் உரிமையை வாங்கி வைத்திருந்தது தேனான்டாள்நிறுவனம். அந்தப்படத்தை தேனான்டாள்நிறுவனம் வாங்கக் காரணம் அது த்ரில்லர் படம் என்பதுதான். இப்போது அந்தப்படத்தில்தான் அருள்நிதி நடிக்கவிருக்கிறார்.

இவர் தேனான்டாள்நிறுவனத்தின் டிமான்டிகாலனி படத்தில் நடித்திருந்தார். அந்தப்படம் வெறி. அதற்கடுத்து வந்த நகைச்சுவைசார்ந்த படமான நாலுபோலிஸூம்நல்லாஇருந்தஊரும் அந்த அளவுக்குப் போகவில்லை. படத்தை ஈரம், வல்லினம் ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கவிருக்கிறார்.

இவர் இயக்கிய முந்தைய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் படஉருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே பெரிதாகப் போகவில்லை. இப்போது வேறொரு படத்தை மொழிமாற்றம் செய்வதால் வேகமாகச் செய்து முடித்துவிடுவார் என்று நம்பி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்களாம்.

விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close