Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவுக்கு வாலு பிரச்னை ஓய்ந்து புதுப் பிரச்னைகள் ஆரம்பம்?

 ஒருவழியாக எல்லாப் பிரச்னைகளும் ஓய்ந்து ‘வாலு’ படம் ரிலீஸ் ஆகிவிட்டது. இப்போது, சிம்புவிடம்  அச்சம் என்பது மடமையடா’, ‘கான்’,’கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் புதிய படம் என படு பிஸி. எனினும் அடுத்த படம் எப்போது என்ற கேள்விகள் எழுந்துவிட்டன. 

கௌதம் மேனன் படமும், செல்வராகவனின் ‘கான் படமும் படப்பிடிப்புகள் நடந்துவருகின்றன. அடுத்ததாக கிருத்திகா உதயநிதி படத்தில் சிம்பு நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வாலு படத்தின் ரிலீஸ் நாளில் மற்றொரு படத்தால் தனக்கு எதிர்பார்த்த திரையங்குகள் கிடைக்கவில்லை என சிம்பு தரப்பில் சொல்லப்பட்டது. 

அதற்கு உதயநிதி தான் காரணம் எனவும் கூறப்பட்டு பிரச்னைகள் எழுந்தன. இதனால்தான், கிருத்திகா உதயநிதி படத்தில் சிம்பு நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது போதாதென பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவான ‘இது நம்ம ஆளு’ படத்திலும் சிக்கல்கள் இருக்கின்றனவாம். அப்படத்துக்காக இன்னும் சில காட்சிகள் எடுக்கப்படாமல் உள்ளன. 

நயன்தாராவின் கால்ஷீட்டிற்காக காத்திருக்கும் படக்குழுவுக்கு அதிர்ச்சியாக நயன்தாரா இனி இது நம்ம ஆளு படத்துக்கு கால்ஷீட் தர இயலாது எனக் கூறிவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே கொடுத்த தேதிகளை வீணடித்துவிட்டதாகவும், மேலும் சம்பள பாக்கியும் இருப்பதால் நயன்தாரா கறாராக முடியாது எனக் கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சிம்புவின் இன்னொரு படமான  ‘வேட்டை மன்னன்’ படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இப்படி நிறையச் சிக்கல்கள் இருந்தாலும், வாலு பிரச்னை முடிவுக்கு வந்தது போல அடுத்தடுத்து சிம்புவின் பிரச்னைகள் தீரும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close