Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீடியாக்கள் பற்றிய சிம்புவின் பதில் சரியா?

 வாலு வெளியானதையொட்டி பிரபல டிவியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் பேசியபோது சிம்பு. பத்திரிகைகள் தன்னைப்பற்றித் தவறாக எழுதுவதாகக் கூறினார். இந்த பதில் மீடியாக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் ஒரு படம் வெளியாவது தள்ளிப்போனால் அதன் மீதுள்ள எதிர்பார்ப்புகள் குறையும் ஆனால் ‘வாலு’ படத்தைப் பொருத்தமட்டில் எதிர்பார்ப்புகள் கூடிக்கொண்டே போனதே எனக் கேட்க. அது எனக்கு பிரச்னைதான். எப்படியாவது படம் வருவதை தடுத்து காலி செய்ய வேண்டும் என நினைத்தால் இன்னும் அதே இடத்தைக் கொடுக்கிறார்களேங்கறனாலதான் இன்னும் பிரச்னை. 

நாங்கள்லாம் யாரும் ‘வாலு’ படம் பாக்கவில்லை என நீங்கள் எல்லாம் சொல்லியிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வெளியாகியிருக்கும் என்றார். அதே நிகழ்ச்சியில் ஒரு பெண் தனக்கு சிம்புவை பிடிக்காது எனவும், ஏன் பிடிக்காது எனவும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். 

அதற்கு விளக்கம் கொடுத்த சிம்பு எனக்கு காதலிக்கிறது பிடிக்கும், அத நான் என் படங்களில் செய்கிறேன். குடும்ப படமா சிம்பு படம் இல்லை என சொன்னீர்கள், அப்படியெனில் ‘வானம்’ என்ன மாதிரியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ன மாதிரியான படம். சரி மற்றவர்கள் என்ன நாட்டையா காப்பாற்றுகிறார்கள் எனவும் சிம்பு பதில் கேள்விகள் கேட்டார். 

ஒரு படம் ஆரம்பித்து ,புது இயக்குநர், தயாரிப்பாளர் என அவர்கள் நலனில் அக்கறையுடன் நான் மூன்று வருடங்கள் காத்திருந்து அந்த படத்தை வெளியிட்டுவிட்டுதான் வருவேன் என் நினைத்த எனக்கு இப்படி ஒரு பெயரா எனக் கேட்டார். மேலும் பார்வையாளர்களான உங்களுக்கே இவ்வளவு வருத்தம் என்றால் என் படம் எனக்கு எவ்ளோ கஷ்டம், வருத்தம் இருக்கும் என்றார். ‘

மீடியாக்கள் உங்களை பரபரப்பாக வைத்திருக்க எது வேண்டுமானாலும் எழுதுவார்கள். அதற்காக நீங்களே உண்மை நிலையைப் புரிந்துகொள்ளமாட்டீர்களா. சிம்பு இன்று படப்பிடிப்புக்கு வந்தார், படப்பிடிப்பு நன்றாக நடந்தது என செய்தி கொடுத்தால் நீங்கள் படிப்பீர்களா? . மீடியாக்கள் பரபரப்பிற்காக, சிம்பு படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதில்லை என எழுதினால் தான் அது செய்தி. அப்பதான் அத நீங்க படிப்பீங்க. அத ஏன் நீங்க நம்பறீங்க என் கேட்டார். 

என்னதான் அவர் தைரியமாக தன்னைப் பிடிக்கவே பிடிக்காது என கூறிய பெண்ணுக்கு மதிப்பளித்து சில பதில்களை கூறினாலும், மீடியாக்களை பொத்தாம் பொதுவாக தவறாக எழுதுவார்கள், பரபரப்பிற்காக செய்தி கொடுப்பார்கள் என்பது சரியான பதிலா என்ற கேள்வியே எழுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்