Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது ரஜினி - ரஞ்சித் படப் பெயர் !

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் மலேசியாவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் இந்தப்படம் பற்றிய எந்தத்தகவலையும் பகிர்ந்து கொள்ளாமல் மிகவும் ரகசியமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுடைய நகர்வுகளையொட்டி அப்படம் பற்றிய பல செய்திகள் அவ்வப்பொழுது வெளியாகிவருகின்றன.

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் பெயர் என்னவென்பதே தற்போதைய ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது, தொடக்கத்தில் காளி, அதன்பின் கண்ணபிரான் என்று சொல்லப்பட்டது. இறுதியாக  கபாலி என்கிற பெயர் பரவிவந்தது.  ரஞ்சித்தின் முந்தைய படமான மெட்ராஸ் படத்துக்கும் இவ்விரு பெயர்களும் சொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

இப்போது,  ரஞ்சித் தன்னுடைய ட்விட்டரில் ரஜினி படத்தின் பெயர் கபாலி என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close