Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பாகுபலியில் சர்ச்சைக்குரிய வார்த்தையை நீக்க வேண்டும்” நீதிபதி உத்தரவு

பாகுபலி படத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்குமாறு படத்தின் இயக்குநருக்கு மத்திய தணிக்கை வாரியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவிடப்படுள்ளது.

பிரபாஸ், ராணா, நாசர், அனுஷ்கா, தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட ஹிட் அடித்த படம் பாகுபலி. இப்படத்தின் ஒரு காட்சியில் பிரபாஸ் பேசும் வசனம் சர்ச்சைக்குள்ளானது.

அவர் பேசும் வசனம் அருந்ததியர்களின் மனதை மிகவும் புண்படுத்துமாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழியில் இப்படத்தின் வசனகர்த்தா மதன்கார்க்கி, திரைப்பட இயக்குநர் ராஜமெளலி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோரின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் தொடரவேண்டும், மேலும் பகடை என்ற வார்த்தையை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடப்பட்டுள்ளது.

இவ்வழக்கை தமிழக ஆதித்தமிழர் கட்சி அமைப்பு செயலர் சு.க.சங்கர், ஆதித்தமிழர் கட்சியில் நிறுவனத் தலைவர் ஜி.ஜக்கையன், தமிழ்ப் புலிகள் அமைப்புச் செயலர் பேரறிவாளன் ஆகியோர் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, “ பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்குமாறு திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மேலும் வசனத்தை நீக்காவிட்டால் திரையரங்குகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தெரிவிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close