Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிக சம்பளம் வாங்கும் நம்பர்ஒன் தமிழ் நடிகை யார் தெரியுமா?

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், நடிகை நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். அனுஷ்கா இரண்டாவது இடத்திலும், தமன்னா 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
 

தமிழகத்தில் முன்னணியில் உள்ள பிரபல நடிகைகள் தங்கள் சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளனர். தமிழ் படங்கள் ஆந்திரா, கேரளாவிலும் வசூல் குவிப்பதோடு, தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு லாபங்களை கொட்டி வருவதால் நடிகர், நடிகைகள் சம்பளத்தை ஏற்றியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் ரூ.10 கோடியில் இருந்து ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல் கதாநாயகிகள் வாங்கும் சம்பள பட்டியலும் வெளிவந்துள்ளது.

நடிகைகள் சம்பள பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு இரண்டரை கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழ் படஉலகில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வரும் இவர், காதல் சர்ச்சைகளில் சிக்கியும் மார்க்கெட் சரியவில்லை. தற்போது மாயா, நானும் ரவுடிதான், தனி ஒருவன், இது நம்ம ஆளு, காஸ்மோரா, திருநாள் ஆகிய படங்கள் இவரிடம் கைவசம் உள்ளன.

சம்பள பட்டியலில் அனுஷ்காவும், நயன்தாராவுக்கு இணையாக இருக்கிறார். இவர் ரூ.2 கோடியில் இருந்து இரண்டரை கோடி வரை வாங்குகிறார். இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த பாகுபலி படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் இப்படம் வெளியானது. அடுத்து இதன் இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. ‘ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி’ படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

நடிகை தமன்னா ஒன்னே முக்கால் கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பாகுபலி படம் தமன்னா மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தலாமா? என்று இவர் யோசித்து வருகிறாராம்.

நடிகை ஸ்ரேயா தற்போது ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இவருக்கு தமிழில் படங்கள் இல்லை. இந்தியில் நடித்த ‘திரிஷ்யம்’ படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. காஜல் அகர்வாலும் ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார். இவர் தற்போது விஷால் ஜோடியாக ‘பாயும் புலி’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

த்ரிஷா ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வாங்குகிறார். கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் ‘தூங்காவனம்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அரண்மனை இரண்டாம் பாகம் படமும் தொடர்ந்து வெளிவர இருக்கிறது

ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சமந்தா, பிரியாமணி ஆகியோர் ரூ.70 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close