Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேசியாவில் வசூலை அள்ளும் வாலு!

 மூன்று வருடங்கள் அரும்பாடு பட்டு ஒரு வழியாக சிம்புவின் ‘வாலு’ படம் வெளியாகிவிட்டது. கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் வசூலில் சோடை இல்லாமல் இருக்கிறது. இதில் சிறப்புச் செய்தி கமர்ஷியல் காதல் படமான வாலு மலேசிய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

கடந்த வாரம் வெளியான படங்களில் ‘விஎஸ்ஓபி’ படத்திற்கு பெரிதாக வரவேற்புகள் இல்லாத நிலையில் வாலு படம் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும் நீண்ட நாட்கள் கழித்து சிம்பு படம் என்ற சிறப்பு வேறு படத்திற்கு இன்னும் எதிர்ப்பார்ப்புகளை அதிகமாக்கிவிட்டது. 

இந்நிலையில் மலேசியாவில் 24 திரைகளில் வெளியான ‘வாலு’ 33 லட்சங்களை வசூலித்துள்ளது. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் 15 திரைகளில் முறையே 15 லட்சம் வசூலித்துள்ளது. அதே போல் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு, அக்‌ஷய் குமாரின் பிரதர்ஸ் படங்களை இவ்விரு படங்களும் வசூலில் பின்னுக்குத் தள்ளியுள்ளன. 

அமெரிக்க மார்கெட்டிலும் வாலு 18 லட்சத்தை சர்வ சாதரணமாக வசூலித்துள்ளது. சிம்புவின் படங்களிலேயே அமெரிக்க மலேசிய திரைகளில் வசூல் அதிகம் பெற்ற படம் வாலு தான். காரணம் சிம்புவின் படத்திற்கு மக்களின் காத்திருப்பும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close