Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இணையங்களில் தீயாய்ப் பரவும் புலி படத்தின் கதை உண்மையானதா?

 சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்,. ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் , சுதீப் , நந்திதா ஸ்ரீதேவி நடிப்பில் செப்டம்பர் 17ம் தேதி வெளியாக உள்ள படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இது புலிப்படக் கதை என இணையத்தில் வைரலாக பரவி வருகிறது ஒரு கதை. விஜய்யும் நந்திதாவும் காதலர்கள், அவரை யாரோ கொலை செய்து விட அந்த விரக்தியில் விஜய் தற்கொலை செய்ய வேண்டி ஒரு மலையிலிருந்து குதிக்க அது அவரை வேறு ஒரு உலகிற்கு கொண்டு செல்கிறதாம்.

அங்கே ஸ்ரீதேவி ராணியாகவும், ஹன்சிகா இளவரசியாகவும்,  சுதீப் தளபதியாகவும் இருக்கிறார்கள். விஜய் தன் குறும்புகள், சண்டைகள், புது யுக்திகள் என ஸ்ரீதேவியை வெகுவாகக் கவர்ந்துவிடுகிறார். இது சுதீப்புக்கு பிடிக்காமல் போகிறது. ஒரு கட்டத்தில், தொலைந்து போன மகன்தான் விஜய்  என ஸ்ரீதேவிக்கு தெரியவருகிறது. அதன்பின் அரச வாரிசாக பொறுப்பேற்கிறார் விஜய். இது பிடிக்காத சுதீப் வில்லன் அவதாரம் எடுக்கிறார். பிறகு நடந்தது என்ன என்பதே மீதிக் கதை எனக் கூறப்படுகிறது. 

அடக்கடவுளே, உல்டா விடும் கதையில் கூட லாஜிக்குகள் இல்லையா என நமக்கு கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே ஹன்சிகா, விஜய் நடனமாடும் போஸ்டர்கள், புகைப்படங்கள் வெளியாகிவிட்டன, இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகன் விஜய் எனில் ஹன்சிகாவிற்கு எப்படி விஜய் அண்ணனாக மாறுவார். ‘

அதே போல் நந்திதா சுதீப்புக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே ஒரு செய்தி இருக்கிறது அதெப்படி அவர் விஜய்யை காதலிப்பார். எல்லாம் சரி ஸ்ருதி ஹாசன் என்ற மிகப்பெரிய மற்றொரு ஹீரோயின் இந்த உலாவரும் கதையில் இம்மி அளவு கூட வரவில்லையே. 

படத்தில் லாஜிக் லவங்கம் கேட்கும் போது பொய்யான கதையில் கொஞ்சமாவது உண்மை வேண்டாமா. ஏய்! என்ன கலர் கலரா ரீல் உட்ற என்ற கவுண்டமணியின் வசனம் தான் நியாபகம் வருகிறது. எது எப்படியோ இந்த பஞ்சாயத்துக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டி இயக்குநர் சிம்புதேவனே இப்போது ட்விட்டரில் இணைந்து விட்டார். ’புலி’ கதை எதுவாக இருப்பினும் இன்னும் 30 நாட்களில் தெரிந்துவிடும் என்பதே உண்மை. 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close