Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எப்போ பாஸ் ரிலீஸ் பண்ணுவீங்க?

 ஒரு வழியாக ‘ விஜய்யின் புலி பட டிரெய்லர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக தயாராகிவிட்டது. படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் வந்தாகி விட்டன. மேலும் சமீபத்தில் துவங்கிய கமலின் ‘தூங்காவனம்’ ரஜினியின் ‘கபாலி’ என வரிசையாக செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில் இந்த தல பட டீம் என்ன தான் செய்கிறார்கள் என்ற கேள்விகள் எழத் துவங்கிவிட்டன. 

ஒரு படத்தின் கதைக்கரு ரிலீஸ் செய்தாலே இது என் கதை என ஒரு கூட்டம் போர்க்கொடி தூக்க தயாராக இருக்கும் நிலையில் பல பெரிய ஹீரோக்களின் படங்கள் ரகசியமாக வைக்கப்படுவது நாமறிந்ததே. ஆனாலும் இந்த ரகசியம் கொஞ்சம் ஓவர் பாஸ் என்றே சொல்லத் தோன்றுகிறது. 

அஜித் படத்தின் தலைப்பை வெளியிடுவதையே அவரது ரசிகர்கள் விழாவாக கொண்டாடி வரும் நிலையில், படத்தின் தலைப்பு  முதல் எழுத்து ‘V' என வினாடி வினா ஸ்டைலில் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. 

வெட்டிவிலாஸ் என அங்காங்கே பரவி வந்தாலும் இப்படி ஒரு பெயர் வைப்பார்களா என்ற கேள்விகளும் மனதில் தோன்றத்தான் செய்கின்றன. ரசிகர்களை கொஞ்சம் அதிகமாகவே சோதிக்கின்றனர் தல பட டீம். இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என செய்திகள் கசிந்து வருகிறது. 

எனினும் எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் படக்குழு இப்போது படத்தின் பாதிப்படப்படிப்புகளை மும்பையில் முடித்துவிட்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்புகளை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். படம் தீபாவளி ரிலீஸ் என முன்பே அறிவிப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் அதிக ரிஸ்கான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். போதும் பாஸ் உங்க ரகசியம்..

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close