Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாரிஸ் ஜெயராஜூக்குப் படமே இல்லை, எதனால்?

  கடந்த சில வருடங்களாகப் பரபரப்பாக இருந்த இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜூக்கு இப்போது படமே இல்லையாம். உதயநிதி நடிக்கும் கெத்து படம் மட்டும் அவர் கைவசம் இருக்கிறது. அந்தப்படத்தின் வேலைகளும் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது என்று சொல்கிறார்கள்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்து வந்தால் பின்னணி இசையமைக்கும் வேலைகள் இருக்கும். அதன்பின் அவருக்கு எந்தப்படமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அவருடைய பாடல்களுக்காகவே படங்கள் ஒடிய காலம்போய் அண்மைக்காலமாக அவருடைய பாடல்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பில்லாமல் போய்விட்டது என்பதால் பெரியபடங்களில் அவரை ஒப்பந்தம் செய்யத் தயங்குகிறார்களாம்.

அதற்கடுத்த நிலையில் உள்ள படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய அவருடைய சம்பளம் பெரிய இடையூறு என்கிறார்கள். அவருடைய சம்பளம் சுமார் மூன்றகோடி என்று சொல்லப்படுகிறது, அதிலிருந்து அவர் இறங்கி வராததால் படங்கள் கிடைக்காமல் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்