Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேடிய கர்நாடக மக்கள்...அமைதியாக காய் நகர்த்திய அஜித்!

டிஜிட்டல் உலகம் மிக அதிக அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. ஒவ்வொரு நடிகரும், சினிமா படாதிபதிகளும், ஏன் அரசியல் பிரமுகர்கள் கூட சமூக வலைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்தும் யுக்தி அதிகரித்துவருகிறது. 

உன் படத்தின் டிரெய்லர், டீஸர் வைரலா, இல்லை என் படத்தின் டிரெய்லர் , டீஸர் வைரலா என பல முன்னணி நடிகர்கள் மத்தியில் அமைதியான போட்டிகளும் நடந்தேறி வருகின்றன. ட்விட்டர் ட்ரெண்ட், யூடியூப் வரைலை, அடுத்து கூகுள் தேடல். ஒவ்வொரு வருட இறுதியிலும் இந்த வருடம் கூகுள் டாப் யார் என்ற சர்வேக்காகவே பலரும் காத்திருப்பது நாம் அறிந்ததே. 

இந்நிலையில் கடந்த 6 மாத கால அரையாண்டில் கூகுள் தேடலில் யார் முதலிடம் என்ற பேச்சு துவங்கிவிட இப்போது கர்நாடக கூகுள் தேடலில் வழக்கம் போல் சுதீப், நடிகையும் , எம்.பியுமான ரம்யா இருவரும் டாப் லிஸ்டில் உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரையும் முந்திக்கொண்டு முதலிடத்தில் அஜித்தும் , பிரபாஸும் இடம்பிடித்துள்ளனர். 

 

‘என்னை அறிந்தால்’ ஸ்டைல் லுக், டீஸர், டிரெய்லர் என அஜித் கர்நாடக மக்களை கொஞ்சம் அதிகமாகவே ஈர்த்துள்ள நிலையில், ‘பாகுபலி’ படம் மூலம் பிரபாஸும் தன் பங்குக்கு கர்நாடக ரசிகர்களை தேட வைத்துள்ளார். எனினும் அஜித் ஏன் முதலிடம் பிடித்தார் என்ற உண்மையான காரணத்தை கூகுள் வெளியிடவில்லை. மேலும் கமல், விஜய், தனுஷ், ஏன் கர்நாடக மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள ரஜினியே இதில் பத்தாவது இடத்திற்கு மேல் தான் உள்ளனர். 

விஜய் ஒரு பக்கம் கேரளா, சூர்யா, விஷால் ஒரு பக்கம் ஆந்திரா என தங்களுக்கான மார்க்கெட்டை வலிமையாக்கி வரும் நிலையில் அஜித் சற்றும் எதிர்பாராமல் கர்நாடக மக்களை கவர்ந்துள்ளார். எனவே அடுத்து வெளியாகும் தன் படங்களை தைரியமாக அஜித் கன்னடத்தில் டப் செய்து வெளியிடலாம் என ஒரு தரப்பு கூறிவருகிறது. எனினும் இது எதனையும் கண்டுகொள்ளாமல் அஜித் இருப்பது ஆச்சர்யமே. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close