Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுஷ்காவையும் த்ரிஷாவையும் பார்த்து வியந்த ராஜமௌலி

 தெலுங்கில் சைஸ் ஸீரோ என்ற பெயரிலும் தமிழில் இஞ்சிஇடுப்பழகி என்ற பெயரிலும் தாயராகும் படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் குண்டான உருவத்துடன் அனுஷ்கா இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் வியந்துகொண்டிருக்கிறார்கள்.

அதுவே அந்தப்படத்துக்குப் பெரிய விளம்பரமாகியிருக்கிறது. ரசிகர்களைத் தாண்டி அண்மையில் மிகப்பெரிya வெற்றிப்படமான பாகுபலி இயக்குநர் ராஜமௌலியையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அனுஷ்கா போஸ்டர் மட்டுமின்றி, இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கும் த்ரிஷா படமான நாயகி படபோஸ்டரையும் அவர் வியந்து பாராட்டியிருக்கிறார்.

த்ரிஷாவின் புன்னகையும் அவர் கையில் இருக்கும் கத்தியும், அவரை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. இவ்விரு போஸ்டர்களும் படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது என்று அவர் சொல்லியிருப்பதால் இரண்டு படக்குழுவினரும் பெரும் சந்தோசத்தில் இருக்கிறார்கள்.     

 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close