Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேய் படத்தில் நடிப்பது ஏன் ...த்ரிஷா சுவாரஸ்ய பதில்!

நாயகி படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. படத்தில் சாந்த சொரூபமான தோற்றத்தில் அதே சமயம் ரத்தம் தோய்ந்த கத்தியுடனும், கண்களில் வஞ்சக சிரிப்புமாக காட்சியளிக்கும் போஸ்டர் ராஜமௌலியைக் கூட பாராட்ட வைத்துள்ளது. கோவி இயக்கத்தில் திரிஷாவின் மேனேஜர் கிரிதர் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான கிரிதர் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்க இருக்கிறார்.

கணேஷ் வெங்கட் ராமன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிட்டார் த்ரிஷா. ஏன் பேயப் படங்களில் ஆதீத ஆர்வம் காட்டுகிறீர்கள், இது இரண்டாவது படமாக நீங்கள் பேய் படத்தையே தேர்ந்தெடுத்ததில் என்ன காரணம் எனக் கேட்டபோது, நிறைய பேய்ப் படங்கள் வந்திருக்கிறது.

அதில் 90% படங்கள் வெற்றியடைந்து இருக்கின்றன. மக்களுக்கு அந்தப் படங்கள் மிகவும் பிடித்திருக்கிறது, எனக்கு அந்த மாதிரியான படங்கள் பிடிக்கும். 1980களில் இருப்பது போன்ற பாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன், படம் முழுவதும் அப்படித் தான் வருவேன். நான் பேயா அல்லது கொலை பண்ணும் பாத்திரமா என்பதை இப்போது சொல்ல முடியாது.

நானும் வித்தியாசமான படங்கள் பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணியிருப்பதால் இப்படத்தை தேர்வு செய்திருக்கிறேன். நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை"  நான் சிறந்த நடிகையாகவும் மேலும் கனவுக் கன்னியாகவுமே என் சினிமா பயணத்தை தொடர நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார் த்ரிஷா. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close