Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதன்முறையாக இரட்டைவேடங்களில் தனுஷ்?

  தனுஷ் இப்போது வேலையில்லாப்பட்டதாரி படத்தின் இரண்டாம்பாகம் மற்றும் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து அவர், எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

அந்தப்படத்தில் அவர் இரட்டைவேடங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை அவர் இரட்டைவேடங்களில் நடித்ததில்லை. அதனாலேயே அப்படி ஒரு திரைக்கதையை இயக்குநர் துரைசெந்தில் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

இது சகோதரர்களை மையப்படுத்திய கதை என்றும் அதனால் ஒரு வேடம் அண்ணன், இன்னொரு வேடம் தம்பியாக தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. சகோதரர்கள் எனும்போது தோற்றத்தில் மாற்றத்திற்காக நிறைய மெனக்கெடவேண்டியதில்லை என்கிற வசதியும் இருக்கிறது. 

 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்