Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஷா சரத் ஆபாச வீடியோ விவகாரத்தில் 2 பேர் சிக்கினர்!

கமலின் 'பாபநாசம்' படத்தில் நடித்த மலையாள நடிகை ஆஷா சரத்தின் போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் இரண்டு பேரைக் கைது செய்துள்ளது கேரள காவல்துறை. கடந்த மாதம் நடிகை ஆஷா சரத்தின் போலி ஆபாச வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ஆஷா சரத், கேரள காவல் துறையினரிடம் எழுத்துப் பூர்வமான புகார் ஒன்றை அளித்து, இதற்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த கேரள காவல்துறையினர், நேற்று இந்த விவகாரம் தொடர்பாக 2 டீன் ஏஜ் சிறுவர்களை மலப்புரம் பகுதியில் கைது செய்துள்ளனர்.

கைதான 2 சிறுவர்களும் இன்னும் பல முன்னணி நடிகைகளின் போலி ஆபாச வீடியோக்களையும், சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் அந்த 2 சிறுவர்களையும் விசாரித்ததில், இந்த உண்மைகள் வெளியே வந்துள்ளன. கைதான 2 சிறுவர்களின் விவரங்களையும் கேரள காவல் துறையினர் இதுவரை வெளிவிடவில்லை. போலி ஆபாச வீடியோ வழக்கு, தற்போது முடிவுக்கு வந்ததில் நிம்மதி அடைந்துள்ள ஆஷா சரத், தான் இந்த வழக்கை சந்தித்தபோது தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close