Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விக்ரம்பிரபு ஜோடியாக நடிக்கவருகிறார் ஷாம்லி

  ரோமியோஜூலியட் படத்தைத் தயாரித்த நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படமொன்றில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அந்தப்படத்தை அருள்நிதி நடித்த தகராறு படத்தை இயக்கிய கணேஷ்விநாயக் இயக்கவிருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப்டபத்தில் நாயகி உட்பட மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் சொல்லியிருந்தார்கள். விக்ரம்பிரபு இப்போது ஜிஎன்ஆர்.குமரவேலன் இயக்கும் வாகா படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். காஷ்மீரில் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அந்தப்படத்தை முடித்துவிட்டுத்தான் கணேஷ்விநாயக் படத்துக்கு வருகிறாராம்.

இந்தப்டபத்தில் விக்ரம்பிரபு ஜோடியாக நடிக்கப் பல நாயகிகளைத் தேடிக் கடைசியாக அஜீத்தின் மச்சினி ஷாம்லியை ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது. ஷாம்லி சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தெலுங்குப்படத்தில் நடித்தார். அந்தப்படம் தோல்வி. அதனால் மறுபடி படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தமிழில் ஏற்கெனவே பல படங்களில் அவரை நடிக்கச் சொல்லிக்கேட்டதாகச் சொல்லப்பட்டது. அப்போதெல்லாம் ஒப்புக்கொள்ளாத ஷாம்லி, இப்போது விக்ரம்பிரபு படத்தில் நடிக்கஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.       

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்