Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாக்கியராஜுக்கு எம்.ஜி.ஆர்...சாந்தனுக்கு விஜய் ! தாலி எடுத்துக் கொடுத்த தருணங்கள்!

பாக்யராஜ் மகன் சாந்தனுக்கும், டி.வி. தொகுப்பாளி கீர்த்திக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. நடிகர் விஜய் தாலியை எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு.

இவர் ‘சக்கரக்கட்டி’, ‘அம்மாவின் கைபேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் திருமணம் செய்துவைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தம் செய்தனர். இந்நிலையில், இவர்களது திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் இருவரது குடும்பத்தாரும், தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் விஜய், இவ்விழாவிற்கு காலையிலேயே வருகை தந்து, தாலி கட்டும் வரை கூடவே இருந்து மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு சென்றார்.

மேலும், சரத்குமார், ராதிகா சரத்குமார், பிரபு, ராதாரவி, மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, விஷால், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், இயக்குனர்கள் தரணி, ஹரி, காமெடி நடிகர் சூரி, கார்த்தி, ஜோதிகா, ரேவதி, சுகன்யா, நகுல், சங்கர் கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், விக்ராந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வருகை தந்த அனைவரையும் இயக்குனர் பாக்யராஜின் சிஷ்யர்களான இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டியராஜன் இருவரும் வாசலில் நின்று வரவேற்றனர்.

இந்நிலையில் பாகியராஜ் - பூர்ணிமா திருமணத்தின் போது எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது பாக்கியராஜின் பையனுக்கு விஜய் தாலி எடுத்துக் கொடுக்க  திருமணம் நடந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close