Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தள்ளிப்போகிறது ருத்ரமாதேவி தனியாக வருகிறார் விஷால்

  அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், கேத்தரின்தெரசா உள்ளிட்ட எராளமாளோர் நடித்திருக்கும் ருத்ராமாதேவி படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டுமொழிகளிலும் தயாராகியிருக்கிறது. இந்தப்படம் ஜூன் மாதமே வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் படத்தின் வேலைகள் முடிவடையாததால் வரவில்லை. அதன்பின்னர் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள். அந்தத் தேதியிலும் வராது என்று சொல்லப்படுகிறது. பாகுபலி போன்று மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்துக்கும் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனாலும் இந்தப்படம் வெளியாகும் அதேநாளில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் பாயும்புலி படமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையாக இருந்தாலும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குஉரிமையாளர்கள் இரண்டு படங்களும் ஒரேநாளில் வருவதால் வசூலில் பாதிப்பு எற்படுமே என்கிற கவலையில் இருந்தனராம். இப்போது ருத்ரமாதேவி தள்ளிப்போகிறது என்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சி என்கிறார்கள். 

  
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close