Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புலி படத்திற்கு தொடர்ந்து வரும் சிக்கல்கள்..திருந்துவார்களா இணைய விஷமிகள்!

புலி படத்தின் டீஸர் 22ம் தேதி இரவு விஜய் பிறந்தநாள் சிறப்பாக வெளியாக உள்ளது என அறிவித்து படக்குழு டீஸர் ரிலீஸ் பணியில் பரபரப்பாக இருந்த வேளையில் திடீரென இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி அதிர்ச்சியை அளித்தது 

இதைத் தொடர்ந்து விஜய்யும் இசை வெளியீட்டு விழாவில் மிகவும் வருத்தப்பட்டு ஒரு தாயின் கருவில் ஆரோக்கியமாக வளர்ந்து சுகப்பிரசவம் ஆகவேண்டிய குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுப்பதற்கு சமம் என உருக்கமாக பேசினார். 

நேற்று மதியம் இந்த நிகழ்ச்சி பிரபல டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் அடுத்த பிரச்னையாக புலி படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகிவிட்டன என்ற வதந்தி படக்குழுவுக்கு தலைவலியாக மாறியுள்ளார். 

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி வரும் படக்குழுவுக்கு இந்தச் செய்தி உண்மையில் வருத்தமான விஷயமே. சம்மந்தப்பட்ட சுற்றுவட்டாரத்தில் விசாரித்து படத்தின் காட்சிகள் வெளியாகவில்லை என படக்குழு உறுதிபடுத்தியுள்ளனர். எனினும் அடுத்தடுத்து படத்தை முடித்து நல்ல முறையில் வெளியிட வேண்டும் என நினைக்கும் படக்குழுவுக்கு இப்பட்டிப்பட்ட லிக் வதந்தியாயினும் அது அவர்களின் வேகத்தில் உண்டாக்கும் தடை என்றே கூற வேண்டும்.

ஒரு பக்கம் இணைய வளர்ச்சி ஹீரோயின்களை ஆபாச வீடியோக்கள் என துரத்தினால், இன்னொரு பக்கம் பெரிய படங்களின் டீஸர், டிரெய்லர், காட்சிகள் என சட்ட விரோதமாக வெளியிட்டு மனசங்கடத்திற்கு ஆளாக்குகிறார்கள் இணைய விஷமிகள். சினிமாவும், சினிமா சார்ந்தவர்களும்  என்றால் அவ்வளவு சுலபமாக ஆகிவிட்டதா என்றே தோன்றுகிறது. 

இதனாலேயே பல பெரிய படங்கள் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களைக் கூட மிக கவனமாக நேரம் பார்த்து வெளியிடுகிறார்கள், படம் சார்ந்த நல்ல விஷயங்களைக் கூட வெளியிட தயக்கம் காட்டி வருவதும் சமீபகாலமாக உருவாகி வருகிறது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்