Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாட்ஸப்பில் சுற்றி வரும் ‘புலி’ படத்தின் கதை இதுதான் - என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

விஜய் நடித்துள்ள 'புலி' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் கதை இணையதளங்களில் வெளியானது. இந்தநிலையில், புலி கதை ஒன்று தற்போது நையாண்டித்தனமாக வாட்ஸ்அப்பில் உலா வருகிறது.

அந்தக் கதையை பார்ப்போம்...

அது ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை ஸ்ரீ தேவி ஆட்சி புரிகிறார். ஒரு நாள் தன் மகள் ஹன்சிகாவிற்கு வைரம் வாங்க வேண்டுமென்று தன்னுடைய படைத்தளபதி சுதீபிடம் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து நகரத்து பொற்கொல்லனான பிரபுவிடம் குறைந்த விலையில் வைரம் வாங்கி வருமாறு ஆணையிடுகிறார். சுதீப் பிரபுவிடம் பணத்தை கொடுத்து செய்கூலி, சேதாரம் இல்லாமல் வைரம் வேண்டும் என்கிறார். ஆனால் பிரபுவோ தான் அவசரமாக குரோம்பேட்டை கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக் கடையை திறந்து வைக்க செல்ல இருப்பதாகவும், பாண்டி பஜாரில் இருக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் வைரம் வாங்கி வருமாறு தன் மகனான விஜய்க்கு கட்டளையிடுகிறார்.

விஜயோ சிறுபிள்ளைத்தனமாக அந்த பணத்தை ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடியே செலவு செய்து விடுகிறார். குறித்த நேரத்தில் வைரம் வராததால் ஆத்திரம் அடைந்த சுதீப் விஜய்யை கட்டி இழுத்து அரசியின் கோட்டைக்கு கொண்டு வருகிறார். விஜய் பணத்தை செலவு செய்ததை அறிந்த ஸ்ரீதேவி அவரை கருஞ் சிறுத்தைக்கு உணவாக்கிவிட ஆணையிடுகிறார். ஆனால் விஜய்யின் அலறலைக்கண்ட சிறுத்தை இறந்து போகிறது.

இதைக்கண்ட ஸ்ரீதேவி தன் மகளான ஹன்சிகாவை சிறுத்தையைக் கொன்ற விஜய்க்கு திருமணம் செய்ய எண்ணுகிறார். ஆனால் அரியணையை கைப்பற்ற ஹன்சிகாவை மணமுடிக்க துடிக்கும் சுதீப், விஜய்க்கு மேலும் பல போட்டிகளை வைத்து பலப்பரீட்சை வைக்கிறார். இப்போட்டிகளில் எல்லாம் வென்று ஹன்சிகாவை விஜய் கை பிடிக்கிறாரா? பிரபு குரோம்பேட்டையில் நகைக்கடையை திறக்கிறாரா? ஸ்ருதிஹாசன் என்ன ஆனார் என்பதே மீதி கதை.

இவண் என்றும் சூப்பர் ஸ்டார் "விஜய்"யின் திரைப்பணியில் புலிக்குட்டியோட தம்பி 'பூனக்குட்டி'. என இப்படி ஒரு கதை வாட்ஸப்பில் சுற்றி வருகிறது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close