Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலாவின் தாரைதப்பட்டை இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடக்கம்

பாலா இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும் வரலட்சுமி கதாநாயகியாகவும்  நடிக்கும் படம் தாரைதப்பட்டை. இந்தப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

கரகாட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நடுவில் சசிகுமாருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக தாமதம் ஏற்பட்டது. அடுத்து படப்பிடிப்பு தொடங்கியதும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். அண்மையில் அந்தமான் போய்ப்படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்தார்கள்.

அந்தமானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி போக வர கப்பலிலும் படப்பிடிப்பு நடத்தினார்களாம். கப்பலில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறதாம்.

அந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தஞ்சாவூரில் இன்று தொடங்குகிறதாம். பதினைந்துநாட்கள் இந்தப்படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள். இதோடு மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் சொல்லப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close