Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிம்பு அனிருத் கூட்டணி தொடருமா?

   சிம்புவின் வாலு வெளியாகிவிட்டது. அடுத்து அவர்கள் தயாரிப்பிலேயே உருவாகியிருக்கும் இதுநம்மஆளு படத்தை வெளியிடவேண்டும். அதன்பின்னர் கௌதம்மேனன் படம், செல்வராகவன் படம் ஆகியன இருக்கின்றன. இவற்றிற்கடுத்து அமீர் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட வேட்டைமன்னன் படத்தை முடித்தாகவேண்டியிருக்கிறதாம். வாலு படத்தின் சிக்கல்களைத் தீர்க்கிற நேரத்தில் வேட்டைமன்னன் படத்தையும் முடித்து வெளியிடப்போவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். எனவே அந்தப்படத்தையும் முடித்துக்கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் சிம்பு இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் வெளியான அந்தப்படத்தின் முன்னோட்டத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்போது மீண்டும் அந்தப்படத்தைத் தொடங்கினால் அனிருத் இசையமைப்பாரா? என்பதுதான் கேள்வி. 

 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்