Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் நயன்தாராவுடன் படமா: அதிர்ச்சி கொடுத்த சிம்பு?

 ஒரு வழியாக ‘வாலு’ ரிலீஸ் ஆகி சிம்புவின் பிரச்னைகள் ஓய்ந்த நிலையில். அடுத்ததாக இது நம்ம ஆளு படத்தை முழுமையாக படக்குழு முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா ஏற்கனவே ‘இது நம்ம ஆளு’ படத்தின் மீதி உள்ள காட்சிகளை நடிக்க சம்பளம் வேண்டும் எனக் கேட்டுள்ளதால் படக்குழு கையைப் பிசைந்து வருகிறது. 

இந்தப் படத்தின் முயற்சிகளுக்கு இடையில் சிம்பு கௌதம் மேனனுடன் ‘அச்சம் என்பது மடமையடா’, ‘கான்’, மற்றும் மெர்சல் படங்களின் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் பெட்டிக்குள் போடப்பட்ட வேட்டை மன்னன் படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்கும் முடிவில் உள்ள சிம்பு இந்த படத்தில் ஹன்சிகா நடிக்க வேண்டிய போர்ஷன்களை முடித்துவிட்டு , அடுத்த போர்ஷனில் நயன்தாராவை நடிக்க வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தின் கதைப்படி இரண்டு நாயகிகளாம், மேலும் யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் மீதி பாடல்களையும் இசையையும் முடிக்க அனிருத்திடம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் எடுக்கப்பட வேண்டிய ‘இது நம்ம ஆளு’ படத்திற்கே நயன்தாரா சம்பளம் குடு கால்ஷீட் தருகிறேன் எனக் கூறிவரும் நிலையில் மீண்டும் சிம்பு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா எனக் கேட்கிறது மற்றொரு தரப்பு

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close