Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ருத்ரமாதேவி வெளியாகிவிடுமா?

செப்டம்பர் 17 ஆம் தேதி புலி படம் வெளியாகவில்லை என்றதும் திரையுலகம் பரபரப்பாகிவிட்டது. அந்தத் தேதியில் தங்கள் படத்தை வெளியிட்டுவிடலாம் என்று ஒரே நேரத்தில் பலர் தயாராகிவிட்டனர்.

ஏற்கெனவே தயாராக இருக்கும் ரஜினிமுருகன் அந்தத் தேதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்ட கவுண்டமணி நடித்த 49ஓ படம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விரு படங்களோடு பல வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிப்போடப்பட்ட ருத்ரமாதேவி படமும் அந்தத் தேதியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ருத்ரமாதேவி படத்தை வெளியிடும் தேனான்டாள்பிலிம்ஸ் முரளியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ருத்ரமாதேவி படத்தை செப்டம்பர் 17 இல் வெளியிடலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம் என்கிறார்.

இந்தப்படம் பாகுபலி படம் வெளியாகிற நேரத்திலேயே வெளியாகவதாகச் சொல்லப்பட்டது. அதன்பின்னர் ஆகஸ்டில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பின்னர் செப்டம்பர் 5 ஆம்தேதி என்று சொல்லப்பட்டது. இப்போது 17 என்கிறார்கள். இதிலாவது நிச்சயம் வெளியாகிவிடுமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close