Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜித்துக்குக் கற்றுக்கொடுத்ததே ரஜினிதான்- ரஜினி ரசிகர்கள் பதிலடி

ரஜினியின் கபாலி படத்துக்காகப் புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்விலிருந்து கசிந்த ஒரு புகைப்படம் மூலம், ரஜினி சால்ட்அண்ட் பெப்பர் என்று சொல்லப்படுகிற பாதி நரைத்த முடியோடு நடிக்கவிருக்கிறார் என்பது தெரியவந்தது.

அண்மைக் காலங்களில் மங்காத்தா, வீரம் ஆகிய படங்களில் அஜித் அப்படி நடித்திருந்தார். அந்தப்படங்களில் அவருடைய இந்த சிகை அலங்காரம் பெரிதாகப் பேசப்பட்டது. ரஜினியின் கபாலி படம் பற்றிய அந்தப்புகைப்படம் வெளியானவுடன், தலைவரும் தல போல நடிக்கவந்துவிட்டார் என்று அஜித் ரசிகர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.

இது அப்படியே வளர்ந்து அஜித்தைப் பார்த்து ரஜினி காப்பியடித்துவிட்டார் என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, உங்க தல க்கும் கத்துக்கொடுத்தது எங்க தலைவர்தான் என்று ரஜினி தயாரித்து நடித்து 1993 இல் வெளியான வள்ளி படத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்