Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவாஜி மணிமண்டபத்தை நடிகர்சங்கம் கட்டாதது பற்றிப் பேசாத கமல், ரஜினி!

நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா  சட்டசபையில் அறிவித்தார்.  இதற்கு நடிகர்கள் கமல், ரஜினி. பிரபு உள்பட பலர்  நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க, நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால், 13 ஆண்டுகள் கடந்தும் இதுவரை மணிமண்டபம் அமைக்கப்படவில்லை. இதிலிருந்தே நடிகர் சங்கத்தின் நிர்வாகம் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், “ எங்களால் முடியாது என்று நடிகர் சங்கம் கூறியிருந்தால் நாங்களே கட்டியிருப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.  சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டாதது நடிகர் சங்கத்துக்கு அவமானம்தான்'' என்றார் விஷால்.

 கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், “ நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவுகோரியதில் அரசு, நடிகர் இனத்திற்க்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் ஒருவன்” என்றார்.

ரஜினி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி.. பாராட்டுகள்” என்றார்.

நடிகர்சங்கம் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்கள். 

அதேசமயம் விஷால் தவிர மற்ற யாரும் 13 ஆண்டுகளாக நடிகர்சங்கம் மணிமண்டபம் கட்ட முன்வராது ஏன் என்கிற கேள்வியை எழுப்பவில்லை.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close