Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காக்காமுட்டை இயக்குநரின் படப்பெயரை மாற்றிய இளையராஜா

காக்காமுட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் அடுத்து இயக்கியிருக்கும் படத்தில் விதார்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார். க்ரைம்த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் பெயர் குற்றமேதண்டனை.

இந்தப்படத்துக்கு முதலில் குற்றமும் தண்டனையும் என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள். இப்போது மாற்றம் ஏன்? படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பிறகு இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரிடம் போயிருக்கிறார்கள்.

பின்னணிஇசைச்சேர்ப்புக்காக முழுப்படத்தையும் பார்த்திருக்கிறார் இளையராஜா. படம் பார்த்த பிறகு இந்தப்படத்துக்கு குற்றமும் தண்டனையும் என்கிற பெயரைவிட குற்றமேதண்டனை என்கிற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னாராம்.

அதைக்கேட்டதும்தான் இயக்குநருக்கும் இதுதான் பொருத்தமான பெயர் என்கிற எண்ணம் வந்ததாம். உடனே படத்தின் பெயரை குற்றமே தண்டனை என்று மாற்றிவிட்டார்கள்.

இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறது இப்படம் முழுமையாகத் தயாரானதும் பொருத்தமான தேதி பார்த்துப் படத்தை வெளியிடவிருக்கிறார்களாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்