Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த படப்பெயர் குடியும் குடித்தனமுமா: இயக்குநர் ராஜேஷ் பதில்!

 வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் வெளியானது தான் தாமதம் ஊரே ராஜேஷின் கதைக்கரு குடி மட்டும் தானா என பஞ்சாயத்தை வைக்கத் துவங்கிவிட்டது. படம் முழுக்க குடிக்கும் காட்சிகள், வசனங்கள் என்றால் சரி படத்தின் தலைப்பே பீர் பாட்டில் வெடித்து பொங்கி பெயர் வருவதும். மேலும் ஒரு மதுபானத்தின் பெயரே படத்தின் தலைப்பாக வேறு இருக்க பலரும் பொங்கி எழுந்துவிட்டனர். 

ஒரு காட்சியில் தமன்னாவையும் குடிக்க வைத்து இன்னும் வாங்கிக் கட்டிக் கொண்டார் இயக்குநர் ராஜேஷ், இந்நிலையில் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘குடியும் குடித்தனமும் என்றும் மேலும் ஹீரோ ஜீவா எனவும் கசியத் துவங்கிவிட்டன. 

 இந்நிலையில் இயக்குநர் ராஜேஷே கொஞ்சம் சூடாகி எல்லாரும் மதுபானத்தை முக்கியத்துவப்படுத்தி படமெடுக்கத்தான் செய்கிறார்கள். ஏன் எல்லாரும் என் மீதே பாய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். மேலும் இன்னமும் என் அடுத்த படம் குறித்து நான் எதையும் முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக பெயரும் இந்தப் பெயர் அல்ல எனக் கூறியுள்ளார். என்னதான் இவர் சொன்னாலும் பலரும் குடிக்கும் காட்சிகள் வைக்கிறார்கள் தான் ஆனால் குடிக்கும் காட்சிகளை மட்டுமே வைப்பதில்லை என்பதே பலரின் பதில். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close