Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருண் பாண்டியனுக்கு பதில் கொடுத்த விஷால்!

 ஒரு பக்கம் பாயும் புலி ரிலீஸ், இன்னொரு பக்கம் நடிகர் சங்கத் தேர்தல் என செம பிஸியாக இருக்கிறார் விஷால். இந்நிலையில் அருண்பாண்டியன் சவாலே சமாளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் பேசியபோது சினிமாவில் பெரும்பங்கு பணம் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநருக்கு செல்கிறது எனக் கூறினார். 

அவர் பேசுகையில், முன்பு எல்லாம் படம் எடுத்து அதை ரிலீஸ் செய்வது ஈசியாக இருந்தது. பைனான்சியர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் நடிகர்கள் அனைவருக்கும் படம் தயாரிப்பில் பங்கு இருக்கும். ஆனால் இப்போது படத்தின் பெரும்பகுதி பணம் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்குத் தான் போகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யும் போது அந்த தயாரிப்பளாருக்கு யாரும் உதவி செய்வதில்லை. படம் சேட்டிலைட் கூட விற்பதில்லை. அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் முடிகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலை கடத்தல் வரை சென்றுள்ளார்.

இந்த படத்தை நானே சொந்தமாக உலக முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறேன் இதை கேள்வி பட்ட அசோக்செல்வன், பிந்துமாதவி இருவரும் தங்களது சம்பளத்தில் ஐந்து ஐந்து லட்சம் விட்டு தருவதாக கூறினார்கள். அனால் நான் அவர்களது பெருந்தன்மையை மதித்து அவர்களுக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்து விட்டேன். இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அந்த படத்தின் வெளியீட்டின் போது அந்த தயாரிப்பாளரின் பிரச்னைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூட உதவ முன்வருவதில்லை என்று கூறினார்.

இப்படி அவர் பேசியதை அறிந்த விஷால் 'தயவு செய்து பொதுவாக இப்படி பேசவேண்டாம். என்னையும் சேர்த்து சில நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். மேலும் யாரெல்லாம் உதவுவதில்லை என குறிப்பிட்டு பெயர்களை கூறினாலும் நன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close