Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷாலுக்குப் பயப்படுகிறதா தயாரிப்பாளர்கள்சங்கம்?

எல்லாத் தொலைக்காட்சிகளையும் அழைத்தால், ஜெயம்ரவியின் ஆகஸ்ட் 27 அன்று நடக்கவிருந்த பத்திரிகையாளர்சந்திப்புக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடைபோட்டது. அதற்கு ஜெயம்ரவியும் உடன்பட்டார்.

அதனால் ஜெயம்ரவியின் புகைப்படத்தைப் போட்டு அவருக்கு நன்றி சொல்லி இன்று (ஆகஸ்ட் 28) விளம்பரம் வெளியிட்டிருந்தது தயாரிப்பாளர்கள்சங்கம். இந்நிலையில் நாளை அதாவது ஆகஸ்ட் 29 அன்று விஷால் தன்னுடைய பிறந்தநாளையொட்டி ஈழஅகதிகளுக்கு உதவிசெய்யவிருக்கிறார்.

அந்நிகழ்ச்சிக்கு எல்லாத் தொலைக்காட்சிகளுக்கும் அழைப்பு இருக்கிறதாம். இதற்கு தயாரிப்பாளர்கள்சங்கம் தடை எதுவும் சொல்லவில்லையாம். இதனால் ஜெயம்ரவிக்குத் தடைபோட்டு நன்றியும் சொன்ன தயாரிப்பாளர்கள்சங்கம் விஷாலுக்கு அந்தக்கட்டுப்பாட்டை விதிக்காதது ஏன்? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

தன்னுடைய படம் வெளியாவதற்கு முந்தைய நாள் பத்திரிகையாளர்களைச் சந்திக்க நினைத்தார் ஜெயம்ரவி, விஷாலின் பாயும்புலி அடுத்தவாரம் வெளியாகவிருக்கிற நிலையில் அவர் பத்திரிகையாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதைத் தயாரிப்பாளர்கள்சங்கம் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

மேலும் அவர் நடிகர்சங்கத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தமக்குச் சிக்கல் வரலாம் என்கிற பயத்தில் தயாரிப்பாளர்கள்சங்கம் அவரைக் கண்டுகொள்ளவில்லையா? என்று கேட்கப்படுகிறது.

அதேநேரம் விஷால் வேறொரு அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்கிறார் என்றும் அவர் இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close