Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹைக்கூ படத்துக்கு பசங்க2 என்று பெயர் வைத்தது ஏன்?

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஹைக்கூ. சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் அந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

சூர்யாவும் அமலாபாலும் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கும் இந்தப்படத்தின் வேலைகள் முழுமையடைந்து வெளியீட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில் படத்துக்கு தமிழகஅரசின் வரிவிலக்கைப் பெற தலைப்பு ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக பெயரை மாற்றமுடிவுசெய்தார்கள்.

ஹைக்கூ என்கிற சொல்லுக்கு நேரடித் தமிழ்ச்சொல்லை வைத்தால் திரைப்படத்துக்கான தலைப்பாக இருக்காது என்று நினைத்திருக்கிறார்கள். அதனால் அதை விட்டுவிட்டு வேறு பல பெயர்களைப் பரிசீலித்தும் சரியாக அமையாமல் போனதாம்.

எனவே இந்தப்படமும் சிறுவர்களை மையப்படுத்தியதுதான் என்பதாலும் ஏற்கெனவே பசங்க என்கிற பெயர் மிகவும் பிரபலம் என்பதாலும் இந்தப்படத்துக்கு பசங்க2 என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close