Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈழக் குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய விஷால் !

நடிகர் விஷால் தனது  பிறந்த நாளை முன்னிட்டு ஆஃப்ர் அமைப்பு நடத்திய குழந்தைகளுக்கான ' காலணிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

சென்னை எழும்பூரில் உள்ள 'ஐ.சி.எஸ்.ஏ' மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பூங்கோதை சந்திரஹாசன் ஈழத் தமிழர்களை பற்றிப் பேசித் தொடங்கி வைத்தார்.

பிறகு பேசிய ஆஃப்ர் அமைப்பை தொடங்கிய சந்திரஹாசன், அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை பற்றி  குறிப்பிட்டு அவர்களுக்கு உதவ முன்வந்த நடிகர் விஷாலை பாராட்டினார்.இதன் பின் ஈழ குழந்தைகள் உட்பட பல குழந்தைகளுக்கு காலணி மற்றும் காலுறையை வழங்கினார்.

இதன்  பின் இவர்களுக்கான ஒரு மாத படிப்பு தொகையான  ரூபாய் .1,67,000யை விஷால் ஏற்று கொண்டு அதற்கான காசோலையை வழங்கினார்.

இறுதியாக பேசிய விஷால், “தான் இதை எந்த விதமான அரசியல் நோக்கத்திற்காகவும் செய்யவில்லை என்றும் சமுக முன்னேற்றத்துக்கு தான் ஒரு வழிக்காட்டியாக இருக்க விரும்புவதாகவும்,இதே போல் ஒவ்வொரு மாதமும் இவர்களின் கல்வித் தொகையை நாம் அனைவரும் முடிந்த வரையில் ஏற்க வேண்டும்” என்று கூறினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு ஆல்பத்திற்கு: http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4658

-நிர்மல்குமார், படம்: விக்னேஷ்

எடிட்டர் சாய்ஸ்

[X] Close