Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனிஒருவனாக செய்வதைவிட பலர் சேர்ந்து செய்வது சிறப்பு - விஷால் பேச்சு

விஷால் தனது  பிறந்த நாளை முன்னிட்டு ஆஃப்ர் அமைப்பு நடத்திய குழந்தைகளுக்கான ' காலணிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் விஷால் பேசும்போது, “ நான் தாமிரபரணி படப்பிடிப்புக்காக இராமேஸ்வரத்தில் இருந்த போது தான் அங்கு இருக்கும் இலங்கை அகதிகள் முகாம் பற்றி எனக்குத் தெரியவந்தது. எனக்கு முகாமைப் பற்றிய இன்னும் பல தகவல்களை என் அண்ணி ஸ்ரேயா அவர்களின் தோழியான பூங்கோதை சந்திரஹாசன் மூலமாக தெரிந்துகொண்டேன்.

மேலும் அவர் இயக்குனராக இருக்கும் ஆஃபர் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பற்றி என்னிடம் கூறியவுடன் எனக்கும் அவர்களுடன் சேர்ந்து நற்பணி செய்ய ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து செய்து வருகிறேன்.

ஒவ்வொரு முறை நான் “ஆஃபர்” சென்று திரும்பும் போது என்னுள் புத்துணர்ச்சி ஏற்படுவதை நான் உணர்கிறேன். என்னுள் அரசியல் நோக்கம் இருப்பதால் தான் நான் இதை போன்ற நற்பணிகளை செய்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எனக்கு சத்தியமாக அதைபோன்ற அரசியல் நோக்கம் துளி கூட இல்லை. நான் ஒரு நடிகன், மக்களை மகிழ்விக்கும் மகத்தான பொறுப்பு எனக்கு உள்ளது. அதை மட்டும் சரியாக செய்தால் போதும் என்று நான் நினைகிறேன்.

நடிகர் கார்த்தி நேற்று இரவு என்னிடம் பேசி கொண்டு இருக்கும் போது பெண் குழந்தைகள் பலர் தாங்கள் படிக்கும் பள்ளியில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் அவர்களுடைய படிப்பையே நிறுத்திவிட்டு சென்றதாகவும் , அதை கருத்தில் கொண்டு கார்த்தி பாரிஸில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றுக்கு அவருடைய அகரம் அறக் கட்டளை மூலமாக ஒரு லட்சம் ருபாய் செலவில்  கழிப்பறை கட்டிகொடுத்துள்ளார்.

அதைப் போலவே ஒரு லட்சம் ருபாய் கொடுத்தால் வேறு ஒரு பள்ளியில் கழிப்பறை கட்டிக் கொடுக்கலாம் என்ற செய்தியை என்னிடம் தெரிவித்தார். நானும் அதை நிச்சயம் செய்ய உள்ளேன், “என் நற்பணி மன்றத்தினர் மூலமாக மக்களை அணுகி நிதி பெற்று இந்தப் பணியை மேலும் சிறப்பாக செய்யவுள்ளேன்.  தனி ஒருவனாக இருந்து பணியாற்றுவதை விட பலர் பேர் கைகோர்த்து இந்த நல்ல விஷயத்தை செய்தால் சிறப்பாக அமையும்” என்றார் விஷால்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close