Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜீவா படத்திலிருந்து கீர்த்திசுரேஷ் விலகியதன் உண்மைக்காரணம் என்ன?

யாமிருக்கபயமே படத்தை இயக்கிய டீகே இயக்கத்தில் ஜீவா, பாபிசிம்ஹா ஆகியோர் நடிக்கும் கவலைவேண்டாம் படத்தில் நாயகியாக கீர்த்திசுரேஷ் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இப்போது அவரை நீக்கிவிட்டு காஜல்அகர்வாலை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

படத்திலிருந்து நாங்கள் நீக்கிவிட்டோம் என்று படக்குழுவினரும், நாங்கள் கொடுத்த தேதிகளை அவர்கள் பயன்படுத்தவில்லை எனவே நாங்களே விலகிக்கொண்டோம் என்று கீர்த்தி தரப்பும் சொல்கிறது. உண்மையில் என்ன நடந்தது? இந்தப்படத்துக்காகச் சம்பளம் பேசிய கையோடு கீர்த்திசுரேஷிடம் நாற்பதுநாட்கள் மொத்தமாகத் தேதிகள் வேண்டும் என்று கவலைவேண்டாம் படக்குழுவினர் கேட்டிருந்தார்களாம்.

கீர்த்தியும் அதற்கு ஒப்புக்கொண்டாராம். இதற்கு நடுவில் தனுஷூடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்திருக்கிறது, அந்த வாய்ப்பு வந்தவுடன் மொத்தமாக நாற்பதுநாட்கள் தேதி தரமுடியாது, பிரித்துப் பிரித்துத் தருகிறோம் என்று சொன்னாராம் கீர்த்தி. இதனால் கவலைவேண்டாம் குழுவினர் அதிருப்தியில் இருந்திருக்கின்றனர்.

அந்தநேரம், முன்பு பேசின சம்பளம் போதாது, இப்போது தனுஷ் படத்தில் நடிக்கிறோம் அங்கு அதிகச்சம்பளம் தருகிறார்கள், அது மட்டுமின்றி தனுஷ் உடன் நடிப்பதால் எனக்கான வாய்ப்புகளும் அதிகமாகிவிட்டன.

மணிரத்னம் படத்திலும் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள், எனவே நீங்கள் எனக்கு முன்பு பேசியதைவிட அதிகச்சம்பளம் தரவேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. முன்பு பேசியதைவிட இரண்டுமடங்கு அதிகம் கேட்டதாலேயே அவரை வேண்டாம் என்று படக்குழுவினர் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

தேதிகள் பற்றிய சிக்கல்கள் எல்லாம் பேசித் தீர்க்கக்கூடியவை, சம்பளச்சிக்கல்தாம் நாயகி மாற்றத்துக்குக் காரணம் என்று சொல்கிறார்கள். வளருகிற நேரத்தில் கீர்த்தி இப்படிச் செய்யலாமா? 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்