Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாந்தனு- கீர்த்தி தம்பதிக்கு விருந்து கொடுத்து அசத்திய விஜய்

 

பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொகுப்பாளர் கீர்த்திக்கும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டதோடு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தியும் வைத்தார் விஜய்.

அப்போதே பாக்யராஜூக்கு எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக்கொடுத்தார் அவருடைய மகனுக்கு விஜய் தாலி எடுத்துக்கொடுத்தார் என்று விஜய்யை எம்ஜிஆரோடு ஒப்பிட்டுச் செய்திகள் வந்தன. இதனால் விஜய் உள்ளூரப் பெரிதும் மகிழ்ந்திருப்பார் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அந்த மகிழ்ச்சியை அவருக்குக் கொடுத்த மணமக்களை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து சிறப்பான விருந்து கொடுத்து மகிழ்ந்திருக்கிறது விஜய் சங்கீதா ஜோடி. விஜய். சாந்தனு இதுபற்றிச் சொல்லும்போது, விஜய் அண்ணாவும் சங்கீதா அக்காவும் இனிமையான தம்பதிகள் அவர்களோடு இருந்த இந்நாள் என் வாழ்க்கையின் மிகச்சிறந்த நாள் என்கிறார்.       

 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close