Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரட்டைவேடங்களில் நடிக்கிறேன்- தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  தனுஷ் இப்போது வேல்ராஜ் இயக்கத்தில் வேலையில்லாப்பட்டதாரி பாகம்இரண்டு படத்தை முடித்துவிட்டு பிரபுசாலமன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது.

அந்தப்படத்தில் முதன்முறையாக இரட்டைவேடத்தில் அவர் நடிக்கிறார் என்றும் நாம் ஏற்கெனவே சொல்லியிருந்தோம். இந்தச் செய்திகளை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய டிவிட்டரில், நான் துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தில் முதன்முறையாக இரட்டைவேடங்களில் நடிக்கிறேன், பிரபுசாலமனின் படம் முடிவடைந்த பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவோம்.

இந்தப்படத்தில் இரண்டுநாயகிகளில் ஒருவராக ஷாம்லி நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தை வெற்றிமாறனின் க்ராஸ்ரூட் நிறுவனமும் எஸ்கேப்ஆர்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். படத்தில் இன்னொரு நாயகியாக இலட்சுமிமேனன் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது, அதுகுறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close