Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி படப்பிடிப்பு மலேசியாவிற்குப் பதில் சென்னைக்கு மாறியது எதனால்?

  ரஞ்சித் இயக்கத்தில் ரனி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று மலேசியாவில் தொடங்கும் என்று முதலில் சொல்லப்பட்டிருந்தது. இப்போது அதே செப்டம்பர் 17 அன்று படப்பிடிப்பு தொடங்குமென்றும் முதலில் சொன்னையில்தான் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்காக அவசரஅவசரமாக சென்னையில் படப்பிடிப்பு நடத்த இடம் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். ஏற்கெனவே சில மாதங்கள் செலவழித்து மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த இடங்கள் தேடிவைத்திருக்கும் நிலையில் ஏன் இந்தத் திடீர் மாற்றம்? அதற்குக் காரணம் மலேசியாவில் உள்ள அரசியல்சூழல்தான் காரணம் என்கிறார்கள்.

அந்நாட்டு பிரதமருக்கு எதிராக அங்கே தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றனவாம். நேற்றும் இன்றும் கூட அங்கே மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கின்றனவாம். இந்த நிலை இன்னும் சில வாரங்களுக்குத் தொடரலாம் என்கிற நிலை இருப்பதாலேயே ரஜினி படத்தின் படப்பிடிப்பை அங்கே நடத்தமுடியாமல் போனது என்கிறார்கள். அதனால் முதலில் சென்னையில் எடுக்கவேண்டியதை எடுத்துவிடலாம் என்றும் அதன்பின் மலேசியா போகலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.   

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close