Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாலு படத்திற்கு தெலுங்கிலும் சிக்கல்?

தமிழில் எல்லா பிரச்னைகளும் முடிந்து வாலு ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் வாலு படத்திற்கு பிரச்னை உருவாகியுள்ளது. இப்போது பிரச்னை தெலுங்கில். நீண்ட நாள் கழித்து வெளியாகும் சிம்பு படம் என்பதாலேயே படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைத்தது.

விமர்சன ரீதியில் கலவையான கருத்துகள் நிலவினாலும் படம் கர்ஷியல் அளவில் நல்ல வசூல் எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு டப்பிங் பதிப்பு விரைவில் ரிலீஸாகவுள்ளது. ஆனால், இப்படத்தை தெலுங்கில் 3 வருடத்திற்கு முன்பே ரூ 1.30 கோடிக்கு நிக் ஆர்ட்ஸ் விற்றுள்ளது.

தற்போது அதிக தொகை கேட்க, வழக்கம் போல் படத்தை வாங்கிய தரப்பு நீதிமன்றம் சென்றது. நீதிமன்றமும் அதே தொகைக்கு தான் படத்தை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்க, தற்போது தெலுங்கு டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றது. எனினும் தயாரிப்புத் தரப்புக்கு எதிர்பார்த்த தொகை இப்போது கிடைக்கவில்லை.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close