Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி படத்தால் விஷால் படத்துக்குச் சிக்கல்?

  ரஜினியின் லிங்கா சிக்கல் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. லிங்கா படத்தை வெளியிட்ட வேந்தர்மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் விஷால் நடித்திருக்கும் பாயும்புலி. இந்தப்படத்தை செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள். இதையொட்டி, லிங்கா படத்தை வாங்கி நட்டமடைந்த விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து எங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன நட்டஈட்டைக் கொடுக்காமல் வேந்தர்மூவிஸ் படத்தை வெளியிடுவதால் அந்தப்படத்தைத் திரையிடமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்களாம்.

அதோடு அந்தச்சிக்கலில் முன்னின்ற விநியோகஸ்தர் சிங்காரவேலன், திரையரங்குஉரிமையானர்களிடம் பாயும்புலி படத்தைத் திரையிடாதீர்கள் மீறித்திரையிட்டால் உங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என்று பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், தயாரிப்பாளர்கள்சங்கம், சென்ன¬மாநகரகாவல்ஆணையரிடம் சிங்காரவேலன் மீது புகார் கொடுத்திருக்கின்றனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக சிங்காரவேலனிடம் கேட்டபோது, லிங்கா படத்தில் நட்டம் ஏற்பட்டவர்களுக்கு இன்னும் தொகை கொடுக்கப்படவில்லை என்பதையொட்டி செங்கல்பட்டு திரையரங்குஉரிமையாளர்கள்சங்கம் பாயும்புலி படத்துக்கு ரெட் போட்டிருக்கிறது. அதையொட்டி திரையரங்குஉரிமையாளர்களிடம் நான் பேசி இந்தப்போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று கேட்டேன் என்றார், நீங்கள் மிரட்டினீர்களாமே என்று கேட்டால், படத்தைத் திரையிடாதீர்கள் அதையும் மீறித் திரையிட்டால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி வசூலிக்காதீர்கள் அப்படி வசூலித்தால் போராட்டங்கள் நடக்கும் என்று சொன்னேன் இது எப்படி மிரட்டலாகும்? என்று கேட்கிறார்.

தயாரிப்பாளர்கள்சங்கம் உங்கள் மீது கொடுத்த புகார் தொடர்பாக ஏதேனும் விசாரணை நடந்ததா? என்றால், இல்லை, ஏற்கெனவே நான் இது தொடர்பாகக் கொடுத்த புகார்கள் மீதும் நடவடிக்கை இல்லை என்கிறார். பாயும்புலி படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த சர்ச்சை வந்திருக்கிறது.     

 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close