Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நயன்தாரா மீது புகார் கொடுத்தார் டி.ராஜேந்தர்!

சிம்புவுக்கு வாலு வெளியாகிவிட்டது அடுத்து என்ன ‘இது நம்ம ஆளு’ படம் தானே. பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா சூரி, ஜெய். ஆண்ட்ரியா நடித்து இருக்கும் இப்படத்தில் இரண்டு பாடல் காட்சிகள் இன்னும் எடுக்கப்படாமல் உள்ளன. மேலும் நயன்தாராவின் தேதிக்காக படக்குழு காத்திருக்கின்றனர்.ஆனால் சம்பளம் பாக்கி காரணமாக நயன்தாரா நடிக்க மறுப்பு கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து நயன்தாரா மீது திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் கொடுத்துள்ளார். புகாரில் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது.

 

படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் ஐந்து நாட்களும், அடுத்த மாதம் ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார். பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம்.

நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக் கொடுக்கும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும் என புகாரில் கோரியுள்ளார் டி.ராஜேந்தர். மேலும் நயன்தாராவிடம் சிம்பு கால்ஷீட் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்தப் படத்தின் நடிகர் தான். தேவையில்லாத வதந்திகள் பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்