Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர்சங்கத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை- எஸ்.ஜே.சூர்யா

நடிகர்சங்கத் தேர்தலில் எங்கள் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுகிறோம் எங்கள்அணி சார்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள் என்று ராதாரவி பேட்டி கொடுத்திருந்தார்.

இது தொடர்பாக, எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டபோது, நான் இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள்சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்சங்கம் ஆகியனவற்றில் உறுப்பினராக இருக்கிறேன். எல்லாச் சங்கங்களிலும் நான் உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன்.

எந்தச் சங்கத்திலும் எந்தப்பொறுப்புக்கும் வர நான் விரும்பியதில்லை. இப்போதைய நடிகர்சங்கத் தேர்தலையொட்டி, எங்கள் அணியை ஆதரித்து ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்டார்கள், நான் ஓட்டுப்போடுகிறேன் என்று சொன்னேன். தேர்தலில் போட்டியிடுவதாக நான் சொல்லவில்லை. எல்லாச் சங்கங்களையும் போல இந்தச் சங்கத்திலும் நான் உறுப்பினராக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close