Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நயன்தாரா பணம் கேட்கவே இல்லை: சொல்கிறார் பாண்டிராஜ்

இது நம்ம ஆளு படத்தின் தாமதம் காரணமாக நயன்தாரா தேதி தர மறுக்கிறார் எனவும். 25 சதவீத பணம் மட்டுமே பாக்கி, பாடல்களை முடித்துக் கொடுத்த பின்னர் மீதி பணத்தை கொடுப்போம் நயன்தாரா படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பாண்டிராஜ் கூறுகையில், உண்மை நிலவரப்படி படம் முடிந்துவிட்டது. அடுத்த வாரம் கூட ரிலீஸ் செய்யலாம். ஆனால் சிம்புவும், டி.ராஜேந்தரும் தான் குத்து பாடல்கள் வேண்டும் என கேட்கின்றனர். மேலும் அந்தப் பாடலில் டி.ராஜேந்தர், சிம்பு, குரளரசன் மற்றும் நயன்தாரா இடம்பெறும்படியும், மேலும் அம்மாடி ஆத்தாடி பாணியிலான பாடலுமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனராம். படத்தின் கதைப்படி அப்படி ஒரு பாட்டே தேவையில்லை.

எனினும் தயாரிப்பாளர்களின் இயக்குநரான நான் மார்கெட்டிங், புரமோஷன் கருதி இப்படி ஒரு பாடல் கேட்கும் போது அவர்கள் விருப்பபடியும், எனது ஸ்டைலிலும் ஒரு பாடல் கொடுக்க நான் ரெடியாக இருக்கிறேன். எனினும் நயன்தாரா இந்தப் பாடலுக்காக 8 முறை கால்ஷீட் கொடுத்து விட்டார். அதில் இரண்டு முறை பாடல் ரெடியாகவில்லை எனவும், வேறு சில காரணங்களாலும் தேதிகளை அவர்களை வீணடித்துவிட்டார்கள். மேலும் நயன்தாரா பணம் கூட வேண்டாம் கதையில் எனக்கு ஆதீத நம்பிக்கை இருக்கிறது. படம் நல்ல முறையில் வெளியானால் போதுமென கூறியுள்ளார்.

25 நாட்களில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை சரியாக நடித்து கொடுத்துள்ளார். நயன்தாராவும் இது குறித்து நடிகர் சங்கத்தில் தகவல் கொடுத்துவிட்டார் எனவும் கூறியுள்ளார் பாண்டிராஜ். கதையே ஒரு படத்தின் முடிவை நிர்ணயிக்கும் இந்தக் காலத்திலும் கூட இன்னமும் இவர்கள் குத்துப் பாட்டு கேட்டு அடம்பிடிப்பது என்ன நியாயம் என்றே தோன்றுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close