Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’இஞ்சி இடுப்பழகி’ படத்தில் தேவர் மகன் பாடல்!

ஒரு படத்தின் டீஸருக்கும், டிரெய்லருக்கும் காத்திருக்கிறொம் எனில் அது கண்டிப்பாக பெரிய ஹீரோவோ அல்லது பெரிய இயக்குநராகவோ மட்டுமே இருக்கவேண்டும். ஒரு ஹீரோயினால் காத்திருக்கிறோம் என்றால் அது நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் இரண்டு படங்களுக்கு நடந்துள்ளது. அதில் ஒன்று ஏற்கனவே வெளியான ஜோதிகாவின் ’36 வயதினிலே’. இப்போது அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’. 

படத்தின் டீஸர் நேற்று வெளியான நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பலரையும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்திய அனுஷ்கா இப்போது டீஸரில் அனைவரையும் உறைய வைத்துள்ளார். உடலை இறக்கி ஸ்லிம் ஃபிட்டாக்க ஹீரோயின்கள் படாத பாடு படும் நிலையில் அனுஷ்கா பல கிலோக்களை ஏற்றி குண்டாக டீஸரில் வர அனுஷ்காவின் ரசிகர்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது. 

அடடே , ஒரு ஹீரோயின் படத்தின் கதைக்காக இப்படி மெனெக்கெடுவது இதுதான் முதல் முறை எனவும் பல இயக்குநர்கள் , சினிமா பிரபலங்கள் என பாராட்டத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் படத்திற்கு இன்னும் மெருகு சேர்க்கும் விதமாக தேவர் மகன் படத்தின் ‘இஞ்சி இடுப்பழகி பாடல் இடம்பெற இருக்கிறதாம். 

படத்தின் ஒரு சீனில் அனுஷ்காவும், ஆர்யாவும் தேவர் மகன் பாடல் இஞ்சி இடுப்பழகி பாடலை ரசித்துக் கொண்டிருக்க இருவரும் அந்தப் பாடலில் தங்கள் இருவரையும் கற்பனை செய்து கொள்வது போல் காட்சி இடம் பெற்றுள்ளதாம். எது எப்படியோ நீண்ட நாட்கள் கழித்து ஹீரோயினை முழுக்க முழுக்க நம்பி ஒரு படம். சொல்லப்போனால் விஜய சாந்தி காலத்திற்கு பிறகு என்று கூட சொல்லலாம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close